மலேசியாவில் இருந்து
200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பெய்ஜிங் சென்ற விமானம் நடுவழியில் மாயமானது. மாயமான
விமனாத்தை கண்டுபிடிக்க 18க்கும் மேற்பட்ட நாடுகள் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தன.
இந்நிலையில் விமானம் ஆஸ்திரேலியவின் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்ததாக செயற்கைகோள்
படம்பிடித்து காட்டியது. இதையடுத்து ஆஸ்திரேலியவில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதியில்
விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் விமானத்தின் உடைந்த பாகங்கள் வங்காள
விரிகுடா பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பாகங்கள் முன்னதாக தேடப்பட்ட பகுதியில் இருந்து 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலையில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த
பாகங்கள் என்று உறுதியாக தெரியவில்லை என்றும் ஆஸ்திரேலிய கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment