கோவை
மதுக்கரை அறிவொளி நகரில் மலைப்பகுதிக்கு அருகில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு
நேற்று இரவு 2 காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் சுற்றி திரிந்தது.
அந்த
பகுதியில் இருந்த வாழைத்தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த
வாழைகளை முறித்து தின்று மிதித்து நாசம் செய்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த
பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். சிலர் தங்களது வீட்டுக்குள்
நுழைந்து பதுங்கி கொண்டனர்.
இதுகுறித்து
வனத்துறை அதிகாரிகளுக்கும், குனியமுத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசாருடன்
இணைந்து பொதுமக்கள் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
பட்டாசு
வெடித்தும், தீப்பந்தம் ஏந்தியும், மத்தளம் அடித்தும் யானைகளை விரட்டும் பணி
நடைபெற்றது. மக்களுக்கு போக்கு காட்டிய காட்டு யானைகள் 1 மணி நேரதுக்கு பின்னர்
காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டன.
இதனால்
அந்த பகுதி மக்கள் விடியவிடிய தூங்காமல் தவித்தனர்.

No comments:
Post a Comment