ஏழாவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 18 வது போட்டியில் பெங்களுர் மற்றும் பஞ்சாப் அணிகள் துபையில் பலப்பரிட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களுர் அணி தொடக்கம்
முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து
ரன்களை எடுக்க தடுமாறியது. நிர்ணயக்கப்பட்ட 20 ஓவரின் முடிவில் பெங்களுர் அணி 8 விக்கெட்
இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி தரப்பில் யுவராஜ் சிங் அதிகபட்சமாக
35 ரன்கள் எடுத்தார். இதையடுத்து எளிதான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப்
அணி 19.5 ஓவர்களில் வெற்றி இழக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி விளையாடியுள்ள
5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment