விளையாட்டு

ஹ்ஜ்ஃப்ஹ்க்ஃப்க்

Wednesday, April 30, 2014

சென்னை குண்டு வெடிப்புக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம்

இன்று காலை சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்தி குறைந்த 2 குண்டுகள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சென்னை செண்ட்ரல் , எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையம் ஆகியவை காவல்துறையின் கட்டுப்பாட்டுகுள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நிலையில் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் , குண்டு வெடிப்பு குறித்து  பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் முதலைமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் குண்டு வெடிப்புச் சதிச் செயலலில் ஈடுபட்டவர்களை பிடிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் 1 லட்ச ரூபாயும் , படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் , சாதாரண காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி , 10 பேர் படுகாயம்

இன்று காலை 7 மணி 5 நிமிடங்களுக்கு சென்னை செண்ட்ரல் வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 7 மணி 15 நிமிடங்களுக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 10 படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பெரும்  பதற்றம் நிலவி வருவதால் , பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுநர்கள் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே குண்டு வெடிப்பில் உயிழந்தவரின் குடும்பத்திற்கு 1 லட்ச ரூபாயும் , படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு 25 அயிரம் ரூபாயும் , சாதாரண காயமடந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்குமாறு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குண்டு வெடிப்பு காரணமாக செண்ட்ரல் ரயிலொ நிலையத்தில் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை செண்ட்ரல் , எழும்பூர் ரயில் நிலையங்களையும் , சென்னை விமான நிலையத்தையும் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். குண்டு வெடிப்பு காரணமாக சென்னை முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 

Tuesday, April 29, 2014

டெல்லி அணியில் நைலுக்கு பதிலாக தாகிரைச் சேர்க்க வாய்ப்பு

ஏழாவது ஐபிஎல் தொடரின் முதற்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகின்றன. சென்னை , மும்பை உள்ளிட்ட 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில் டெல்லி டெர்டெவில்ஸ் அணியின் வேகப்பந்து வீரர் நாதன் கோல்ட்டர் நைல் (ஆஸ்திரேலியா) காயம் அடைந்துள்ளார். இதனால் அவர் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகியுள்ளர்.

அவருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீரர் இம்ரான் தாகீர் இடம் பெறலாம் என்று தெரிகிறது. இம்ரான் தாகீரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மதுக்கரையில் வாழைத் தோட்டத்தை சீரழித்த காட்டு யானைகள்

கோவை மதுக்கரை அறிவொளி நகரில் மலைப்பகுதிக்கு அருகில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு நேற்று இரவு 2 காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் சுற்றி திரிந்தது.

அந்த பகுதியில் இருந்த வாழைத்தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த வாழைகளை முறித்து தின்று மிதித்து நாசம் செய்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். சிலர் தங்களது வீட்டுக்குள் நுழைந்து பதுங்கி கொண்டனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கும், குனியமுத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசாருடன் இணைந்து பொதுமக்கள் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் ஏந்தியும், மத்தளம் அடித்தும் யானைகளை விரட்டும் பணி நடைபெற்றது. மக்களுக்கு போக்கு காட்டிய காட்டு யானைகள் 1 மணி நேரதுக்கு பின்னர் காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டன.

இதனால் அந்த பகுதி மக்கள் விடியவிடிய தூங்காமல் தவித்தனர்.


மதுரையில் ஆழ்துளைக் கிணறு அமைக்க புதிய கட்டுப்பாடுகள்

 தமிழகத்தில் தற்போது ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழ்க்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கான விதிமுறைகளை அனைத்து மாவட்டங்களிலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மதுரையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு ஆறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனஇதன்படி ,
1. மதுரை மாவட்டத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகள் அமைக்கும் அனைத்து நிறுவனங்களும் தங்கள் அலுவலகம் அமைந்துள்ள பகுதியின் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தங்கள் நிறுவனம் மற்றும் நிறுவனத்திலுள்ள வாகனங்களின் விபரங்களை உடனடியாகவும், கண்டிப்பாகவும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

2. கடந்த 6 மாத காலத்தில் மதுரை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்ட முழு விபரத்தினை சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.

3. மதுரை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகள் அமைக்கும் அனைத்து நிறுவனங்களும் தாங்கள் ஆழ்துளை கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகள் அமைக்கும் பொழுது பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.

4. ஆழ்துளை கிணறு அமைக்கப்படவுள்ள இடத்தின் அருகாமையில் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் பெயர், முகவரி (கைப்பேசி எண்ணுடன்) மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனத்தின் பெயர், உரிமையாளர் பெயர் மற்றும் முகவரியுடன் கூடிய விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை கண்டிப்பாக வைக்க வேண்டும்.

5. ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி முடிந்த பின்பு கிணறுகளின் மேற்புறம் மூடி பொருத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் உள்ளது என்பதனை உறுதி செய்தபின்பு சம்பந்தப்பட்ட ஆழ்துளை கிணற்றின் உரிமையாளர் மற்றும் ஆழ்துளை கிணறு தோண்டும் நிறுவன உரிமையாளர் இருவரும் இணைந்து உறுதிமொழி கடிதம் அளிக்க வேண்டும். மேற்கண்ட உறுதிமொழி கடிதத்துடன், கிணற்றின் முழு விபரங்கள் அடங்கிய கடிதத்தினையும் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவன உரிமையாளர், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.

6. ஆழ்துளை கிணறு அமைக்க உபயோகிக்கப் பயன்படும் எந்திரம் மற்றும் கருவிகளை நல்ல முறையில் பராமரித்து இயக்க வேண்டும். பழுதுகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.


ஊருக்குள் புகுந்த காட்டெருமைகளால் சுற்றுலாப் பயணிகள் சிதறி ஓட்டம்

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் சிறந்த கோடை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் கோடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில்  கொடைக்கானல் நகருக்குள் காட்டெருமைகள் கூட்டம் ஒன்று திடீரென வீதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். மேலும் காட்டெருமைகள் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக வட்டமிட்டுக் கொண்டு இருந்ததால் அந்த பாதையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டெருமைகளை வனப்பகுதிக்கு விரட்டினர் . 

மலேசிய விமானத்தின் பாகங்கள் வங்காள விரிகுடாவில் கண்டெடுப்பு - ஆஸ்திரேலிய கடலாய்வு நிறுவனம்

மலேசியாவில் இருந்து 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பெய்ஜிங் சென்ற விமானம் நடுவழியில் மாயமானது. மாயமான விமனாத்தை கண்டுபிடிக்க 18க்கும் மேற்பட்ட நாடுகள் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தன. இந்நிலையில் விமானம் ஆஸ்திரேலியவின் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்ததாக செயற்கைகோள் படம்பிடித்து காட்டியது. இதையடுத்து ஆஸ்திரேலியவில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் விமானத்தின் உடைந்த பாகங்கள் வங்காள விரிகுடா பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பாகங்கள் முன்னதாக தேடப்பட்ட பகுதியில் இருந்து 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று உறுதியாக தெரியவில்லை என்றும் ஆஸ்திரேலிய கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சென்னை விமானநிலையத்தை தனியார்மயமாக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் - உயர்நீதிமன்றம்

சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய விமான நிலைய ஊழிய சங்கத்தினர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இதன் மீதான விசாரணையை ஜூன் 2-ம்  தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அதுவரை சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க விதிக்கப்பட்டுள்ள இடைகால தடை தொடரும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

மாம்பழ சீசன் தொடங்கியது - சுவைக்க துவங்குங்கள்

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை விரும்பி சுவைத்து உண்ண விரும்பாதவர் இவ்வுலகில் உளரோ என்று கேட்டால் அதற்கு இல்லை என்று தான் பதில் கூற வேண்டும். அந்த அளவிற்கு அனைவரையும் சுண்டி இழுப்பது மாம்பழம் ஆகும். இப்படி அனைத்து தரப்பினராலும் விரும்பி சுவைக்கப்படும் மாம்பழ சீசன் தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளது. அதிலும் சேலம் மாம்பழம் என்றால் தனிச் சிறப்பு தான்………… சேலம் மாம்பழம் குறித்து சுவாரசியமான செய்தித் தொகுப்பு இதோ உங்களுக்காக………………..
நாவில் நீர் ஊறவைக்கும் மாம்பழத்தை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். மாம்பழ  சீசன் தொடங்கிவிட்டாலே அனைவரும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு மாம்பழங்களை வாங்கிச் சென்று சுவைப்பது வழக்கம். அதிலும் சேலம் மாம்பழம் என்று கூறினால் அனைவரின் நாவிலும் அதைச் சுவைத்தே ஆக வேண்டும் என்ற ஆசை வந்துவிடும்.  மல்கோவா , அல்போன்ஸா , செந்தூரம் , வரகம்பாடி , குதாதத் , குண்டு , போன்ற பல்வேறு வகையான மாம்பழங்கள் அனைவரின் நாவையும் நடனமாடச் செய்து கொண்டிருக்கிறது . சேலம் மாம்பழ சீசன் இந்த ஆண்டும் தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளது. கிருஷ்ணகிரி , வாழப்பாடி , தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்காக மாம்பழங்கள் வந்துள்ளன. இதனால் மாம்பழ பிரியர்களுக்கான விருந்து தொடங்கிவிட்டது என்று தான் கூற வேண்டும்.

இது ஒரு புறமிருக்க மாம்பழ பிரியர்களுக்கு விருந்தளிக்கும் விவசாயிகளோ விளைச்சல் குறைவாக இருப்பதாக கூறுகின்றனர். அதே சமயம் வியாபாரிகள் நேரடியாக தங்களிடமே கொள்முதல் செய்யப்படுவதால் போதிய லாபம் கிடைப்பதாக விவாசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். விவசாயிகளிடமிருந்து வாங்கிச் சென்று வீதிகளிலும் , கடைகளிலும் விதவிதமாக வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் மாம்பழங்களை மலை போல் குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

சேலத்து மாம்பழத்தை இங்கு உள்ள பொதுமக்கள் கொல்கத்தா , டெல்லி , மும்பை போன்ற மாநிலங்களில் உள்ள தங்களின் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மாம்பழத்தை அனுப்பி வைத்து நட்பையும் உறவையும் புதுப்பித்துக் கொள்வதாகக் கூறுகின்றனர் இந்த மாம்பழ வாடிக்கையாளர்கள்………


மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊற்றுமாம் என்ற பழமொழிக்கேற்ப மனமும் சுவையும் கொண்ட இந்த சேலத்து மாம்பழம் ஆண்டுதோறும் உறவுகளுக்கும் நட்புக்கும் பாலமாய் விளங்குகிறது என்று கூறினால் அது மிகையாகாது………….

மே 1 முதல் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. டீசல், டயர் ஆகியவற்றின் விலை உயர்வு காரணமாக பெங்களூரிலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் மே ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. டயர் விலை உயர்வு , காப்பீட்டுத் தொடை அதிகரிப்பு , சுங்க சாவடி கட்டண உயர்வு போன்ற காரணங்களால் பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதால் கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

திண்டுக்கல் அருகே கோர விபத்து - 2 பேர் பலி

திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலமரத்துப்பட்டி அருகே சாலை ஓரத்தில் பழுதாகி  நின்று கொண்டு இருந்த  வேன் மீது  ,மதுரையில் இருந்து திண்டுக்கலை நோக்கி வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விலாங்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவரும் சோழவந்தானை சேர்ந்த சதிஷ் என்பவரும்    சம்பவ இடத்திலயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் இருவர்  படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமத்திக்கபட்டுளனர் தகவலறிந்து வந்த அம்பாத்துரை காவல் துறையினர் விபத்தில் பலியானவர்களின் உடல்களை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

பெங்களூரையும் சாய்த்தது பஞ்சாப் அணி

ஏழாவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின்  18 வது போட்டியில் பெங்களுர் மற்றும் பஞ்சாப் அணிகள் துபையில் பலப்பரிட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களுர் அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை  இழந்து ரன்களை எடுக்க தடுமாறியது. நிர்ணயக்கப்பட்ட 20 ஓவரின் முடிவில் பெங்களுர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி தரப்பில் யுவராஜ் சிங் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். இதையடுத்து எளிதான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் வெற்றி இழக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது

ஐபிஎல் சூதாட்டம் குறித்து எந்த குழு விசாரிப்பது என்பது குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக சீனிவாசன் உள்பட 13 பேரிடம் விசாரணை மேற்கொள்ளுமாறு முட்கல் குழுவிற்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. சூதாட்டம் குறித்து முட்கல் குழு விசாரணை மேற்கொள்வதற்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் ஐபிஎல் சூதாட்டம் குறித்து எந்தக் குழு விசாரிப்பது என்பது குறித்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும் ஐசிசி தலைவராக சீனிவாசன் பணியாற்றுவது தொடர்பாக கருத்து தெரிவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக பிசிசிஐ பரிந்துரை செய்த ரவிசாஸ்திரி உள்பட 3 பேர் கொண்டகுழுவை உச்சநீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. 

வெயிலைத் தணிக்க குளிர் கண்ணாடிகள் விநியோகம்

கோடை காலம் நடைபெற்று வரும் நிலையில் சேலம் மாநகரில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சேலம் மாநகரில் சுமார் 105 டிகிரியைத் தாண்டிக் கொழுத்தும் வெயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் கடுமையான வெயில் காரணமாக போக்குவரத்து காவலர்கள் கண் நோய்களில்  சிக்கித் தவிக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து கண்களைக் காத்துக் கொள்ளும் வகையில் சேலம் மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு காவல்துறையின் சார்பில் குளிர் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் போக்குவரத்து காவலர்கள் சுமார் 130 பேருக்கு காவல்துறையின் சார்பில் குளிர் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. 

Monday, April 28, 2014

ஐதராபாத்தை பந்தாடியது சென்னை

ஏழாவது ஐபிஎல் தொடரின் முதற்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று  வருகின்றன. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை அணி ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி சென்னை அணியின் நேர்த்தியான பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் ரன் எடுக்க திணறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிதான இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியின் வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்து ரன் சேர்த்தனர். கடைசி ஓவரில் 4 பந்துகளுக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அபாரமான பவுண்டரி அடித்து கேப்டன் தோனி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். அபாரமக ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெய்ன் சுமித் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை அணி தொடர்ச்சியாக பெற்ற நான்காவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. 

கோடை வெயிலை தணிக்கை கொடைக்கானலில் குவியும் மக்கள் வெள்ளம்




கோடை காலம் தொடங்கியிருப்பதால் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. கோடை வெயில் காலத்தை முன்னிட்டும் , விடுமுறை காலத்தை கழிப்பதற்காகவும் மலைப்பிரதேசமான கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தை தனிப்பதற்காகவும் , கொடக்கானலில் உள்ள குளுமையை  மகிழ்ச்சியான முறையில் கொண்டாடுவதற்காகவும் ஏராளமானோர் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். அங்குள்ள முக்கிய சுற்றுலாப் பகுதியான பிரையண்ட் பூங்கா , பசுமைப் பள்ளத்தாக்கு , துண்பாறை ஆகிய பகுதிகளில் மக்கள் வெள்ளம் அலைமோதி காணப்படுகிறது.  கூட்ட நெரிசல் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விடுமுறை காலம் என்பதாலும் , கோடை காலம் என்பதாலும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வரத்து அதிகரிக்கும் என்பதால் சுத்தமான குடிநீர் , கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

வைகை அணைக்கு வாய்த்த வன்கொடுமை

நீரின்றி அமையாது உலகு

                                                                          

இது அய்யன் திருவள்ளுவனால் நீரின் மேன்மையை  பற்றியும், பயன்பாட்டை பற்றியும்  உலகிற்கு எடுத்து சொல்லப்பட்ட வரிகள் ஆகும் .
நீர் என்ற ஒன்று  இந்த உலகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதனை  எடுத்துச்சொல்ல நம்மை சுற்றி அன்றாடம் பல்வேறு நிகழ்வுகள் நடை பெற்று வருகின்றன .தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் விவசாயம் செழிப்பதற்காகவும்,மக்கள் குடிநீர் பெறுவதற்காகவும் உதவ வேண்டும் என்று ,அப்போது நம்மை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் நினைத்ததன் விளைவாக உருவானது தான் "வைகை ஆணை".
 கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியார் அணையிலிருந்து வரும் தண்ணீரை சேமித்து வைத்து,, மதுரை, திண்டுக்கல்,மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களுடைய, விவசாயத்துக்கான நீர் ஆதாரத்தை பூர்த்தி செய்வதற்காகவும் ,குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வைகை ஆணை முக்கிய பங்காற்றி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வைகை அணைக்கு  ,காமராஜர் முதலமைச்சராக இருந்த போது பல்வேறு     உள்  கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்து  மேம்படுத்தினார் .


இந்த அணை மொத்த கொள்ளலவான 71 அடி உயர அளவிற்கு  நீரை சேமித்து வைக்க கூடிய திறன் கொண்டது . கடந்த சில ஆண்டுகளாக  வைகை அணையின் நீர்மட்டம் 45 அடிக்கு குறையாமல் காணப்பட்டது .இதனால் இந்த அணையை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் மக்கள் ஓரளவு பயன் பெற்று வந்தனர் . ஆனால் இந்த ஆண்டு நிலவும் ,கடும் வறட்சியால்  அணையின் நீர்மட்டம் 23 அடியாக குறைந்துள்ளது . இதனால்  வைகை அணையின் நீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் நிலை என்ன ஆகும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் இந்த அளவிற்கு குறைந்ததற்கு  அங்கே மண்டி கிடக்கும் ஆகாய தாமரைகளையும் ,சரியான கால இடைவெளியில் பொதுப்பணி துறையினர் அணையில் உள்ள சேற்றை தூர் வாரவில்லை  என்பதே காரணம் என்று அணையை சுற்றி உள்ளவர்கள்  தெரிவிக்கின்றனர்.

 இனி வரும் காலங்களிலாவது ,வைகை அணையின் மீது பொதுப்பணி துறையினர் அக்கறை காட்டுவார்களா??அணையில் உள்ள சேற்றை தூர்வாரி ,,ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுவார்களா???? என்ற கேள்விகளுக்கு பொதுப்பணி துறையினர்  தான்,, தங்களின் செயல்கள் மூலம் பதில் அளிக்க வேண்டும் ......

தாய் நாட்டுக்காக உயிர்நீத்த மாவீரருக்கு மக்கள் அஞ்சலி....

காஷ்மீர் மாநிலம் சேபியா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் ஏற்பட்ட நடந்த துப்பாக்கி சண்டையில் சென்னையை சேர்ந்த ராணுவவீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் மரணமடைந்தார். இதையடுத்து அவரின் உடல் சொந்த ஊரான சென்னை தாம்பரம் வரவழைக்கப்பட்டு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று அவரனின் உடல் ஊர்வலமாக சென்னை பெசன்ட் நகருக்கு எடுத்து செல்லப்பட்டு  ராணுவ மரியாதையுடன் 42 குண்டுகள் முழங்க பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தாய்நாட்டிற்காக உயிர்நீத்த தன்னிகரற்ற தலைவருக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
 

Sample text

Sample Text

Sample Text

 
Blogger Templates