விளையாட்டு

ஹ்ஜ்ஃப்ஹ்க்ஃப்க்

Thursday, May 1, 2014

திருவள்ளூரில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்க கோரிக்கை



திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் , பெரியபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆறுகள் மற்றும் ஏரிகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.  சட்டவிரோதமாக அள்ளப்பட்ட தரம் குறைந்த மணல் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

மும்பை அணிக்கு ஐந்தாவது அடி கொடுத்தது ஐதராபாத் அணி

ஏழாவது ஐபிஎல் தொடரின் முதற்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் மும்பை அணி மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களம் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியில் வார்னர் 51 பந்துகளுக்கு 65 ரன்கள் குவித்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து ரன் எடுக்க திணறியது. இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அபாரமாக பந்து வீசி எதிரணியினரை திணரடித்த ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகானாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நடப்புச் சாம்பியன் மும்பை அணிக்கு இது தொடர்ச்சியான 5 ஆவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. 

கோவையில் யானைகள் அட்டகாசம்

கோவையை அருகே உள்ள பாலவிநாயகர் நகரில் சுமார் 140 வீடுகளில் 500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இப்பகுதிக்குள் சுமார் 6 காட்டு யானைகள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தின. மேலும் யானை தாக்கியதால் பலத்த காயமடைந்த ஜோதி என்பவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்தனர். காட்டு யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 

Sample text

Sample Text

Sample Text

 
Blogger Templates