கோவையை அருகே உள்ள பாலவிநாயகர்
நகரில் சுமார் 140 வீடுகளில் 500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி
மலை அடிவாரத்தில் உள்ள இப்பகுதிக்குள் சுமார் 6 காட்டு யானைகள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தின.
மேலும் யானை தாக்கியதால் பலத்த காயமடைந்த ஜோதி என்பவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து
யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்தனர். காட்டு யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதியில்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment