விளையாட்டு

ஹ்ஜ்ஃப்ஹ்க்ஃப்க்

Tuesday, April 29, 2014

மதுரையில் ஆழ்துளைக் கிணறு அமைக்க புதிய கட்டுப்பாடுகள்

 தமிழகத்தில் தற்போது ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழ்க்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கான விதிமுறைகளை அனைத்து மாவட்டங்களிலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மதுரையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு ஆறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனஇதன்படி ,
1. மதுரை மாவட்டத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகள் அமைக்கும் அனைத்து நிறுவனங்களும் தங்கள் அலுவலகம் அமைந்துள்ள பகுதியின் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தங்கள் நிறுவனம் மற்றும் நிறுவனத்திலுள்ள வாகனங்களின் விபரங்களை உடனடியாகவும், கண்டிப்பாகவும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

2. கடந்த 6 மாத காலத்தில் மதுரை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்ட முழு விபரத்தினை சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.

3. மதுரை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகள் அமைக்கும் அனைத்து நிறுவனங்களும் தாங்கள் ஆழ்துளை கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகள் அமைக்கும் பொழுது பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.

4. ஆழ்துளை கிணறு அமைக்கப்படவுள்ள இடத்தின் அருகாமையில் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் பெயர், முகவரி (கைப்பேசி எண்ணுடன்) மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனத்தின் பெயர், உரிமையாளர் பெயர் மற்றும் முகவரியுடன் கூடிய விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை கண்டிப்பாக வைக்க வேண்டும்.

5. ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி முடிந்த பின்பு கிணறுகளின் மேற்புறம் மூடி பொருத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் உள்ளது என்பதனை உறுதி செய்தபின்பு சம்பந்தப்பட்ட ஆழ்துளை கிணற்றின் உரிமையாளர் மற்றும் ஆழ்துளை கிணறு தோண்டும் நிறுவன உரிமையாளர் இருவரும் இணைந்து உறுதிமொழி கடிதம் அளிக்க வேண்டும். மேற்கண்ட உறுதிமொழி கடிதத்துடன், கிணற்றின் முழு விபரங்கள் அடங்கிய கடிதத்தினையும் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவன உரிமையாளர், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.

6. ஆழ்துளை கிணறு அமைக்க உபயோகிக்கப் பயன்படும் எந்திரம் மற்றும் கருவிகளை நல்ல முறையில் பராமரித்து இயக்க வேண்டும். பழுதுகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.


No comments:

Post a Comment

 

Sample text

Sample Text

Sample Text

 
Blogger Templates