கோடை காலம் நடைபெற்று வரும்
நிலையில் சேலம் மாநகரில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சேலம் மாநகரில் சுமார் 105 டிகிரியைத் தாண்டிக் கொழுத்தும் வெயிலால் பொதுமக்கள் மிகுந்த
சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் கடுமையான வெயில் காரணமாக போக்குவரத்து காவலர்கள்
கண் நோய்களில் சிக்கித் தவிக்கும் அபாயத்திற்கு
தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து கண்களைக் காத்துக் கொள்ளும்
வகையில் சேலம் மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு காவல்துறையின் சார்பில் குளிர் கண்ணாடிகள்
வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் போக்குவரத்து காவலர்கள்
சுமார் 130 பேருக்கு காவல்துறையின் சார்பில் குளிர் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment