விளையாட்டு

ஹ்ஜ்ஃப்ஹ்க்ஃப்க்

Monday, April 28, 2014

வைகை அணைக்கு வாய்த்த வன்கொடுமை

நீரின்றி அமையாது உலகு

                                                                          

இது அய்யன் திருவள்ளுவனால் நீரின் மேன்மையை  பற்றியும், பயன்பாட்டை பற்றியும்  உலகிற்கு எடுத்து சொல்லப்பட்ட வரிகள் ஆகும் .
நீர் என்ற ஒன்று  இந்த உலகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதனை  எடுத்துச்சொல்ல நம்மை சுற்றி அன்றாடம் பல்வேறு நிகழ்வுகள் நடை பெற்று வருகின்றன .தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் விவசாயம் செழிப்பதற்காகவும்,மக்கள் குடிநீர் பெறுவதற்காகவும் உதவ வேண்டும் என்று ,அப்போது நம்மை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் நினைத்ததன் விளைவாக உருவானது தான் "வைகை ஆணை".
 கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியார் அணையிலிருந்து வரும் தண்ணீரை சேமித்து வைத்து,, மதுரை, திண்டுக்கல்,மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களுடைய, விவசாயத்துக்கான நீர் ஆதாரத்தை பூர்த்தி செய்வதற்காகவும் ,குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வைகை ஆணை முக்கிய பங்காற்றி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வைகை அணைக்கு  ,காமராஜர் முதலமைச்சராக இருந்த போது பல்வேறு     உள்  கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்து  மேம்படுத்தினார் .


இந்த அணை மொத்த கொள்ளலவான 71 அடி உயர அளவிற்கு  நீரை சேமித்து வைக்க கூடிய திறன் கொண்டது . கடந்த சில ஆண்டுகளாக  வைகை அணையின் நீர்மட்டம் 45 அடிக்கு குறையாமல் காணப்பட்டது .இதனால் இந்த அணையை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் மக்கள் ஓரளவு பயன் பெற்று வந்தனர் . ஆனால் இந்த ஆண்டு நிலவும் ,கடும் வறட்சியால்  அணையின் நீர்மட்டம் 23 அடியாக குறைந்துள்ளது . இதனால்  வைகை அணையின் நீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் நிலை என்ன ஆகும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் இந்த அளவிற்கு குறைந்ததற்கு  அங்கே மண்டி கிடக்கும் ஆகாய தாமரைகளையும் ,சரியான கால இடைவெளியில் பொதுப்பணி துறையினர் அணையில் உள்ள சேற்றை தூர் வாரவில்லை  என்பதே காரணம் என்று அணையை சுற்றி உள்ளவர்கள்  தெரிவிக்கின்றனர்.

 இனி வரும் காலங்களிலாவது ,வைகை அணையின் மீது பொதுப்பணி துறையினர் அக்கறை காட்டுவார்களா??அணையில் உள்ள சேற்றை தூர்வாரி ,,ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுவார்களா???? என்ற கேள்விகளுக்கு பொதுப்பணி துறையினர்  தான்,, தங்களின் செயல்கள் மூலம் பதில் அளிக்க வேண்டும் ......

No comments:

Post a Comment

 

Sample text

Sample Text

Sample Text

 
Blogger Templates