இன்று காலை 7 மணி 5 நிமிடங்களுக்கு
சென்னை செண்ட்ரல் வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 7 மணி 15 நிமிடங்களுக்கு சக்தி
வாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 10
படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்
செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பெரும் பதற்றம்
நிலவி வருவதால் , பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுநர்கள் ரயில் நிலையம்
முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே குண்டு வெடிப்பில் உயிழந்தவரின்
குடும்பத்திற்கு 1 லட்ச ரூபாயும் , படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு 25 அயிரம்
ரூபாயும் , சாதாரண காயமடந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்குமாறு ரயில்வே
நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குண்டு வெடிப்பு காரணமாக செண்ட்ரல் ரயிலொ நிலையத்தில்
ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை செண்ட்ரல் , எழும்பூர்
ரயில் நிலையங்களையும் , சென்னை விமான நிலையத்தையும் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்துள்ளனர். குண்டு வெடிப்பு காரணமாக சென்னை முழுவதும் பெரும் பதற்றம் நிலவி
வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)
No comments:
Post a Comment