ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக
சீனிவாசன் உள்பட 13 பேரிடம் விசாரணை மேற்கொள்ளுமாறு முட்கல் குழுவிற்கு உச்சநீதிமன்றம்
ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. சூதாட்டம் குறித்து முட்கல் குழு விசாரணை மேற்கொள்வதற்கு
பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் ஐபிஎல் சூதாட்டம் குறித்து எந்தக்
குழு விசாரிப்பது என்பது குறித்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும்
ஐசிசி தலைவராக சீனிவாசன் பணியாற்றுவது தொடர்பாக கருத்து தெரிவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
தெரிவித்துள்ளது. ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக பிசிசிஐ பரிந்துரை
செய்த ரவிசாஸ்திரி உள்பட 3 பேர் கொண்டகுழுவை உச்சநீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment